‘பீட்சா’ ரெடி…

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் ‘பீட்சா’. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஆடுகளம் நரேன், சிம்ஹா, பூஜா, கருணா, வீர சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘அட்டகத்தி’ தயாரிப்பாளர் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஒரு காதல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது.  சங்கம் சினிமாஸ் தமிழகம் முழுவதும் இப்படத்தை திரையிடுகிறது.

பீட்சா டெலிவரி செய்யும் ஒருவர், ஒரு மர்மமான இடத்திற்கு சென்ற போது, அவரது வாழ்க்கையில் அது எப்படிப்பட்ட மாற்றத்தையெல்லாம் உண்டு பண்ணுகிறது என்பதுதான் படத்தின் கதை.

தென்மேற்கு பருவக்காற்று, சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் கிடைத்துள்ள எதிர்பார்ப்பு இப்படக்குழுவினருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,  விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள் :

  • இன்று அக்டோபர் 19 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரங்கள்... பீட்சா திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் படம். விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நட ...

  • 2012ம் ஆண்டு வெளிவந்து ஆச்சரியப்படும் வகையில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘பீட்சா’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் நல்ல விமர்சனத்துடன் , நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ‘பைவ் ஸ்டார்’ நிறுவனத்திற்காக ஒரு படத்த ...

  •       இன்று நவம்பர் 30ம் தேதியன்று வெளியாகும் படங்கள் பற்றிய ஒரு சிறு விவரம். நீர்ப்பறவை ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம். இசை - என்.ஆர். ரகுநந்தன். விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா மற்றும ...

  • ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்,  திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சி.வி. குமார் தயாரித்து வரும் ‘பீட்சா - 2 - தி வில்லா’ படத்தை இணைந்து தயாரிக்கிறது. ‘பீட்சா’  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் படம் இது. இந்த படத்தை தீபன் ச ...

  • ‘அட்ட கத்தி’, ‘பீட்சா’, ஆகிய வெற்றிப்  படங்களைத் தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தற்போது ‘சூது கவ்வும்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இதற்கடுத்து ‘பீட்சா 2 - தி வில்லா’ படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கவும் ஒரு புதுமுக ...