You are here: Home » TV » விஜய் டிவி – ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் வைரமுத்து

விஜய் டிவி – ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் வைரமுத்து

Posted On : November 18, 2013

super singer - vairamuthu

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.

இளம் பின்னணிப் பாடகர், பாடகியரை உருவாக்கும் விதமாக அமைந்துள்ள இந்நிகழ்ச்சி பல வருடங்களாக அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ள ஒரு நிகழ்ச்சியாகும்.

பிரபல பின்னணிப் பாடர்களான மனோ, சீனிவாஸ், சுஜாதா, உன்னி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ஒரு பிரபலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

அந்த வரிசையில் இந்த வாரம் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

நாளை மறுநாள் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை வைரமுத்து கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அவருடைய பாடல்களை மட்டுமே பாட உள்ளனர்.

‘டாப் 10’ போட்டியாளர்களான சோனியா, சௌந்தர்யா, மதுமிதா, பார்வதி, சாய் விக்னேஷ், கிருஷ்ணன், சையத், அரவிந்த் சீனிவாஸ், திவாகர், சரத் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்று பாட உள்ளனர்.

இந்த மூன்று  நாள் சிறப்பு நிகழ்ச்சியை ‘நீயா நானா’ கோபிநாத் மற்றும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க உள்ளனர்.

Comments are closed.

Descargar musica