ரஜினிகாந்தின் ‘2.0’ மீண்டும் தள்ளிப் போகும் ?

ரஜினிகாந்தின் ‘2.0’ மீண்டும் தள்ளிப் போகும் ?

SHARE
2.0 teaser launch

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘2.0’.

‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியானது. அப்போதே படம் 2017ம் வருட தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவித்தார்கள்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ‘சயின்ஸ் பிக்ஷன்’ படம் என்பதால் படத்தில் பல விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. இந்த வேலைகள் நிறைவடைய தாமதமாகும் என்பதால் படத்தின் வெளியீட்டை அடுத்த வருடம் ஜனவரி 25க்குத் தள்ளி வைக்கிறோம் என கடந்த மாதம் அறிவித்தார்கள்.

ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பட வெளியீடு மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

படத்தின் விஎப்எக்ஸ் வேலைகள் ஜனவரிக்குப் பிறகுதான் முடிவடைய உள்ளதாம். மேலும், ஜனவரி கடைசியில் படத்தை வெளியிட்டால் பெரிய வசூலை அள்ளுவது சந்தேகம்.

‘பாகுபலி 2’ படம் கோடை விடுமுறையில் வெளிவந்ததால்தான் 1300 கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. எனவே, ‘2.0’ படத்தை கோடை விடுமுறையில் வெளியிட்டால்தான் நல்ல வசூலைப் பெற முடியும் என்பதால் 2018 ஏப்ரல் கடைசியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம்.

விரைவில் மீண்டும் தள்ளி வைப்பு பற்றிய அறிவிப்பு வந்தாலும் வரலாம்.