screen4screen
nayanthara-velaikkaran

2017 தமிழ் சினிமா – நம்பர் 1 நடிகை யார் ?

SHARE:

2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களின் பல படங்கள் வெளிவந்துள்ளன.

அனைத்து முன்னணி ஹீரோயின்களின் படங்களும் வெற்றி பெற்றதோ, தோல்வியடைந்ததோ வழக்கம் போலவே ஹீரோக்களின் முக்கியத்துவத்திற்கு முன்னால்  அவர்கள் முக்கியமில்லாமல் போய்விடுகிறார்கள். இந்த ஆண்டில் பல ஹீரோயின்களின் படங்கள் அப்படித்தான் அமைந்துள்ளது.

இருந்தாலும் இந்த ஆண்டில் தங்களது படங்கள் மூலம் கொஞ்சம் வெளியில் தெரிந்த ஹீரோயின்களின் பட்டியலைக் கொஞ்சம் பார்ப்போம்.

கீர்த்தி சுரேஷ் – பைரவா, பாம்பு சட்டை

ஜனனி ஐயர் – அதே கண்கள், பலூன்

மியா ஜார்ஜ் – ரம், எமன்

ஹன்சிகா – போகன்

அனுஷ்கா – சி 3, பாகுபலி 2

ஸ்ருதிஹாசன் – சி 3

ஐஸ்வர்யா ராஜேஷ் – கட்டப்பாவ காணோம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

பிரியா ஆனந்த் – முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன்

சஞ்சிதா ஷெட்டி – என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே

மகிமா நம்பியார் – குற்றம் 23, கொடி வீரன்

நிக்கி கல்ரானி – மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி

சாய் தன்ஷிகா – எங்க அம்மா ராணி, உரு, விழித்திரு

ரெஜினா – மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன்

நயன்தாரா – டோரா, அறம், வேலைக்காரன்

மடோனா செபாஸ்டியன் – கவண்

ரித்திகா சிங் – சிவலிங்கா

கேத்தரின் தெரேசா – கடம்பன், கதாநாயகன்

ஸ்ரீதிவ்யா – சங்கிலி புங்கிலி கதவ தொற

சுனைனா – தொண்டன்

தன்யா – பிருந்தாவனம், கடம்பன்

மஞ்சிமா மோகன் – சத்ரியன், இப்படை வெல்லும்

ஸ்ரேயா – அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

தமன்னா – பாகுபலி 2, அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

ஆனந்தி – பண்டிகை, ரூபாய், என் ஆளோட செருப்பக் காணோம்

வரலட்சுமி – விக்ரம் வேதா, நிபுணன், சத்யா

ஆன்ட்ரியா – தரமணி, துப்பறிவாளன், அவள்

அமலா பால் – வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப் பயலே 2

காஜல் அகர்வால் – விவேகம், மெர்சல்

ஜோதிகா – மகளிர் மட்டும்

ரகுல் ப்ரீத் சிங் – ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று

சமந்தா – மெர்சல்

நித்யா மேனன் – மெர்சல்

ரம்யா நம்பீசன் – சத்யா

லாவண்யா திரிபாதி – மாயவன்

அஞ்சலி – பலூன்

உள்குத்து – நந்திதா

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடிகைகளும், அவர்கள் நடித்துள்ள படங்களிலும் தங்களது சிறந்த நடிப்பால் போட்டியில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் நயன்தாரா, ஆன்ட்ரியா, கேத்தரின் தெரேசா, ஜோதிகா, அமலா பால், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அனுஷ்கா ஆகியோரை அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலம் தனித்து குறிப்பிடலாம்.

அவர்களில் ‘அறம்’ என்ற ஒரே படத்தின் மூலம் மற்ற அனைவரையும் பின்னுக்குள் தள்ளி இந்த ஆண்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா தான்.

நயன்தாரா, இனிமேலும், கிளாமராக உடை அணிந்து, அவரை விட இளம் ஹீரோக்களுடன் ஆடிப் பாடுவதை எல்லாம் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். ‘அறம்’ படம் அவருக்கென்று ஒரு தனி அடையாளத்தைக் கொடுத்துள்ளது.

வேறு எந்த முன்னணி ஹீரோக்கள் கூட இப்படி ஒரு வெளிப்படையான விமர்சிக்கக் கூடிய ஒரு கதாபாத்திரத்தை அவர்களது படங்களில் வைக்கத் தயங்குவார்கள். ஆனால், நயன்தாரா துணிச்சலான ஒரு கலெக்டராக ‘அறம்’ படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

2017ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான பல விருதுகள் நயன்தாராவைத் தேடி நிச்சயம் வரும்.

SHARE: