‘பாகுபலி’யின் பரவசம் ஆரம்பம்…

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘பாகுபலி’. இந்த படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக போஸ்டர்கள் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாக சில தினங்களுக்கு முன் படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்திருந்தார்.

அதன்படி மே 1ம் தேதியிலிருந்து இந்தப் படத்தின் போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். இன்று படத்தின் நாயகனான பிரபாஸ் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு சிவலிங்கத்தை பிரபாஸ் ஏந்தியபடியுள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

“கங்கையை ஏந்திடும் சிவனை
தோளினில் ஏந்திடும் இவனை
யார் எனப் பார்த்திடும் ஞாலம்
ஒரு கணம் நின்றிடும் காலம்”

என்ற பாடலுடன் தன்னுடைய டிவிட்டர் வலைத்தளத்தில் இயக்குனர் ராஜமௌலி ‘பாகுபலி படம் தமிழ் ரசிகர்களுக்கும் ‘பாகுபலி’ போஸ்டர் சென்றடையும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தமிழில் ஜுலை மாதம் வெளியாக உள்ளது.