ஜுலை 16ம் தேதி தெலுங்கு ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பு ஆரம்பம்

ஜுலை 16ம் தேதி தெலுங்கு ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பு ஆரம்பம்

SHARE
star maa big boss launch date

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த மாதம் 25ம் தேதி ஆரம்பமானது.

தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஸ்டார் மா டிவியில் ஜுலை 16ம் தேதி ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 15 பிரபலங்கள், 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்குவதுதான் நிகழ்ச்சியின் வடிவம்.

தெலுங்கில் 12 பிரபலங்கள், 70 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தங்க உள்ளார்கள்.

இதற்காக ஸ்டார் மா டிவி, 100 பிரபலங்கள் வரை அலசி ஆராய்ந்து அவர்களில் இருந்து 12 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.

ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளதால் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்போதே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

தமிழில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு தெலுங்கில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கம் என்பதை ஜுலை 16க்குப் பிறகே தெரிந்து கொள்ள முடியும்.