screen4screen
big boss vijay tv kamalhaasan

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வாங்கும் ‘பிக் பாஸ்’

சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியும், ஹிந்தித் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சிதான்தான் ‘பிக் பாஸ்’. தற்பொழுது விஜய் தொலைகாட்சி பிரமாண்டமாக தயாரித்து வருகிறது

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொத்து வழங்கப்போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதை கமல்ஹாசன் முதன் முறையாக நிகழ்த்த இருக்கிறார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பதினைந்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பில்லாமல், 100 நாட்கள் இணைந்து வசிக்கப்போகின்றனர். அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத் தொடர்பும் வழங்கப்படமாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும்.

முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனிடம் ‘பிக் பாஸ்’ பற்றிக் கேட்ட போது,

“விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன். என்னைத் தவிற வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் வந்துள்ளது. தற்பொழுது எதிர்மறையாக இருக்கப்போகிறது.

மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும். இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன். இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்க வைக்கப் போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன்,” என்று ஆர்வமாகக் கூறினார்.

எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது. மேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ‘சவால்கள்’ தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும்.

விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில்,

“இந்த புது விதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். தமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் ஹாசன் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் பொழுது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது,” என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Vijay Tv Bigg Boss hosted by Kamal Haasan

Yes its official , Kamal Haasan is the Host of the Tamil version of BIGG BOSS soon to be aired on Vijay TV .This is Kamalhaasan’s First Foray into Television and the excitement is palpable . His social commitment and his bold opinions on social injustice, especially his recent tenacious critique on state politics makes him an inimitable choice .

The International format is being introduced first time in the Tamil market and on Vijay TV , which has always had it good when it comes to Unique content offering in the Non fiction Space . The show would see the coming together of 15 Celebrities in a Posh House with all the amenities but who are completely Cut off from technology and the outside world for 100 Days .

When asked on choosing BIGG BOSS as his first foray into Television ,Kamal Haasan said “ When Vijay TV approached me to play host , I funnily quipped , who better than me right, all my life have been under a constant watch and have been judged on whatever I have done , public or private. But now Roles are reversed as I would stand with the audiences and watch these celebrities in the house survive this ordeal.”

The Endemol owned format BIG BROTHER which has had 10 Successful seasons in Hindi as BIG BOSS with Salman playing host has also had its regional success in Kannada and Bengali. Bigg Boss , the show attempts to provide a look into the behavior of celebrities under surveillance . Apart from enduring the Weekly Tasks the inmates have the arduous task of nominating their colleagues for elimination .Last man standing wins , in a format which is an emotional roller coaster ride for inmates and audiences .

“We are keen to leverage the Uniqueness of the format , the reality appetite of Tamil audiences and a great host like Mr.Kamal Haasan not only to drive ratings but to put out cutting edge and innovative content “ Says Krishnan Kutty , GM, Vijay TV.

Bigg Boss will air on Prime time Monday to Sunday on 9 Pm on weekdays and 8.30 PM on weekends.

SHARE: