பரபரக்கும் திரைக்கதையுடன் ‘போங்கு’

பரபரக்கும் திரைக்கதையுடன் ‘போங்கு’

SHARE
bongu gallery

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்கும் படம் ‘போங்கு’.

நட்ராஜ் சுப்ரமணியன் (நட்டி) நாயகனாக நடிக்கிறார். ருஹி சிங் நாயகியாக நடிக்கிறார். இவர் ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார். பிரபல ஹிந்தி இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கிய ‘காலண்டர் கேர்ள்ஸ்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் மற்றும் மனிஷாஸ்ரீ, அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பிரபல கலை இயக்குனர் சாபுசிரிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய தாஜ் இப்படத்தை இயக்குகிறார்.

‘போங்கு’ படம் டிராவலிங் பற்றிய படம். சாலைகளில் அதுவும் நேஷ்னல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பரபரன்னு பறக்கும். நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி காரக்டர் அப்படியே பொருந்தி போய் விட்டது. சரியாக சொல்லப் போனால் ‘சதுரங்க வேட்டை’யைத் தாண்டுவது போல இந்த கதாபாத்திரத்தில் அவர் ஜொலிப்பார்.

நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். அந்த ஆதரவு ‘போங்கு’ படத்திற்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் இயக்குனர் தாஜ்.

படம் விரைவில் வெளியாக உள்ளது.