screen4screen
chathru

சத்ரு – விரைவில்…திரையில்…

‘போங்கு’ படத்தைத் தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

நவீன் நஞ்சுண்டான் இயக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்க, கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் நவீன் நஞ்சுண்டான் கூறியதாவது,

“தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதை தான் ‘சத்ரு’. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் இது. ஒவ்பொரு ரசிகனும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும்.

வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் பிரகாசமானவராக இருக்கும் கதிர் மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்கிற நடிகர்களுக்கு அந்தப் படம் ஒரு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தித் தரும் என்பது சினிமா பார்முலா. அது கதிருக்கும் நடக்கும். கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே பொருத்தமாக நடித்திருக்கிறார்.

படத்திற்குத் தேவையான செலவு செய்த தயாரிப்பாளர்கள் ரொம்பவும் பாராட்டுக்குரியவர்கள். கூடிய விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது,”என்றார் இயக்குனர் நவீன் நஞ்சுண்டான் .

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடை பெற்றுள்ளது.
இசை – அம்ரிஷ்
பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே
கலை – ராஜா மோகன்
ஸ்டன்ட் – விக்கி
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
தயாரிப்பு – ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

SHARE: