30 நாளில் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவு

30 நாளில் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவு

SHARE
dhruva natchathiram news

கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக ஸ்லோவேனியா நாட்டில் நடைபெற்றது. அங்கு படத்தின் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தின் டீசர் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே வெளியிடப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்தது.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் முதன் முறையாக நடிக்கும் இந்தப் படத்தை சில வருடங்களுக்கு முன்பு சூர்யா நாயகனாக நடிக்க பூஜை போட்டு, அதன் பின் கைவிட்டார்கள்.

இப்போது அந்தக் கதையில்தான் விக்ரம் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களில் முடிந்துவிடும் என கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.