SHARE
mangalapuram

ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக புதுவை G.கோபால்சாமி தயாரிக்கும் படம் ‘மங்களாபுரம்’.

இந்த படத்தில் யாகவன், சிவகுரு, நாயகர்களாகவும், காயத்ரி, கமலி, கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். மற்றும் அஜெய் ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, சந்தோஷ், வேலுசாமி, பேபி தர்ஷினி, பேபி மகதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் கோபால் கூறியதாவது,

“புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர், தங்களுக்குச் சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்யா சக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்யா சக்தி யார் ?, அந்த சக்தியை எதிர்த்து இளம் காதலர்கள் வென்றார்களா ?, அல்லது அமானுஷ்யா சக்தி வென்றதா ? என்பதுதான் படத்தின் பரபரப்பான திரைக்கதை.

மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு. படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இம்மாதம் படம் வெளியாகிறது,” என்றார் இயக்குனர்.
இசை – கார்த்திகேயன் மூர்த்தி
பாடல்கள் – கோ.சேஷா
ஒளிப்பதிவு – திருஞான சம்மந்தம்
கலை – சின்னா
நடனம் – எஸ்.எல்.பாலாஜி, ராம்முருகேஷ்
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி
தயாரிப்பு மேற்பார்வை – கோவை ஷுசேன்
வசனம் – சிவா
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி
கதை – ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ்
திரைக்கதை, இயக்கம் – R.கோபால்
இணை தயாரிப்பு – சித்ராதேவி செழியன்
தயாரிப்பு – புதுவை.G.கோபாலன்சாமி