screen4screen
nayanthara-sarjun-movie

நயன்தாரா நடிப்பதால் பெரும் மகிழ்ச்சி – சர்ஜுன்

“லட்சுமி, மா” ஆகிய குறும் படங்கள் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த இயக்குனர் சர்ஜுன், நயன்தாரா நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார்.

‘அறம்’ படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்.

நயன்தாரா நடிக்க உள்ள படத்தை இயக்குவது பற்றி சர்ஜுன் கூறுகையில்,

“வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு குறும் படங்கள் நல்ல பாதையாகும். எனது முதல் படமான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் எனது ‘Maa’ குறும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் KJR ஸ்டுடியோஸ் ராஜேஷ் சார் அவர்கள் எனக்கு போன் செய்து என்னிடம் ஏதாவது சுவாரசியமான கதையு உள்ளதா எனக் கேட்டார். நான் தயார் செய்துள்ள ஒரு கதையை அவரிடம் சொன்னேன். அது நயன்தாரா மேடமுக்காக என்பது எனக்கு அப்போது தெரியாது. பிறகு அவர் என்னிடம் இக்கதையை நயன்தாரா மேடமிடம் சொல்ல வேண்டும் என்று கூறிய போது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

கதையைக் கேட்டு மிகவும் ரசித்தார் நயன்தாரா மேடம். இது ஒரு உணர்ச்சிபூர்வமான திகில் படம். இந்தக் கதையை நான் எழுதிய போது ஒரு பெரிய நடிகர் அல்லது நடிகை இதில் நடித்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன்.

தற்போது நயன்தாரா மேடம் போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் மற்றும் அருமையான நடிகை நடிக்க இருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

எனது ‘Maa’ குறும்படத்தை பார்த்ததாகவும் அதன் கதையும் மற்றும் அதனை எடுத்த விதமும் அவருக்கு பிடித்திருந்ததாகவும் நயன்தாரா மேடம் என்னிடம் கூறினார். நயன்தாரா மேடமும் தயாரிப்பாளர் ராஜேஷ் சாரும் என் மீதும் எனது கதையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் ஒரு தரமான படத்தை தந்து காப்பாற்றுவேன்,” என்கிறார் சர்ஜுன்.

SHARE: