இன்று நள்ளிரவில் ‘புலி’ டிரைலர்…

புதுப் படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை ஆகியவற்றை நள்ளிரவில் வெளியிடும் பழக்கத்தை யாரோ ஆரம்பித்து வைத்து விட்டார்கள்.

ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்கள் நடித்துள்ள அந்தப் படங்களின் டிரைலரைப் பார்க்கும் ஆவலில் நள்ளிரவு வரை தூங்காமல் அந்த டிரைலரை வெளியான ஒரே நாளில் லட்சக் கணக்கான ஹிட்ஸ்களைப் பெற வைப்பதும் வழக்கமாகி விட்டது.

விஜய் நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள ‘புலி’ படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு யு டியூப் வீடியோ இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

ஏற்கெனவே ‘புலி’ படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி இதுவரை 68 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்களை அள்ளியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் ‘புலி’ டிரைலரை வெளியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE: