‘சண்டக் கோழி 2’ படத்திற்கு சென்னையில் உருவாகும் மதுரை

‘சண்டக் கோழி 2’ படத்திற்கு சென்னையில் உருவாகும் மதுரை

SHARE
sanda kozhi 2

விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் விஷால் நடிக்க இருக்கும் 25-வது படம் ‘சண்டக் கோழி 2’.

லிங்குசாமி இயக்க உள்ள இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று சென்னை, பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் அரங்கம் என அழகான மதுரையை 6 கோடி செலவில் வடிவமைக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

அதற்கான பூஜை இன்று காலை பின்னி மில்லில் விஷால் பிலிம் பாக்டரி இணை தயாரிப்பாளர் எம்.எஸ். முருகராஜ், இயக்குனர் லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவன் பங்கேற்க நடந்தது.

லிங்குசாமி, விஷால் முதன் முறையாக இணைந்த ‘சண்டக் கோழி’ படம் 2005ம் ஆண்டு பெரிய வெற்றியைப் பெற்றது. 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தின் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

‘அஞ்சான்’ படத் தோல்விக்குப் பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த லிங்குசாமி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார்.