screen4screen
savarakathi-poorna

சவரக்கத்தி – ‘சுபத்ரா’ கதாபாத்திரமாகவே மாறிய பூர்ணா

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் ஒரு பக்கம், கிளாமராக மட்டுமே நடிக்கும் நடிகைகள் மற்றொரு பக்கம், படங்களில் வந்து போகும் நடிகைகள் இன்னொரு பக்கம் என பல விதமானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், ஒரு இயக்குனரின் கற்பனையில் உருவான, வழக்கமான ஹீரோயின்களைப் போல இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் நடிகைகள் குறைவுதான். ஒரு இயக்குனரின் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உயிர் கொடுத்துள்ளார் பூர்ணா என ‘சவரக்கத்தி’ படத்தில் அவர் நடித்துள்ள ‘சுபத்ரா’ கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகிறார் படத்தின் இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா.

‘சவரக்கத்தி’ படத்தோட கதையை எழுதி முடிச்சதும் நாயகி கதாபாத்திரம் ரொம்ப முக்கியமான கதாபாத்திரமா அமைஞ்சது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணியில் இருக்கிற ஆறேழு நடிகைகள் கிட்ட கேட்டோம். ஆனால், அவங்க யாருமே நடிக்க ஒத்துக்கலை.

இந்தக் கதையை சொன்னதுமே பூர்ணா நடிக்க சம்மதிச்சாங்க. அப்புறம் அவங்களுக்கு புடவை கட்டி, பூ வச்சிக்கிட், மஞ்சள் பூசுன முகத்தோட, ரோடுல சாதாரணமா நடக்க வச்சோம். அவங்க சேலையை இழுத்து சொருகின விதம், நடந்த விதம் அப்படியே படத்தோட கதாபாத்திரம் சுபத்ரா-வா தெரிஞ்சாங்க.

பூர்ணா நடிச்ச கதாபாத்திரத்தில் நாங்க முதல்ல நடிக்கக் கேட்ட நடிகைங்க நடிச்சிருந்தாங்கன்னா, பூர்ணா அளவுக்குக் கண்டிப்பா நடிச்சிருக்க மாட்டாங்க. இந்தப் படத்துல மிஷ்கின், ராம் எந்த அளவுக்கு பேசப்படுவாங்களோ, அதே அளவுக்கு பூர்ணாவும் பேசப்படுவாங்க,” என பூர்ணாவைப் பற்றி பெருமிதமாகப் பேசுகிறார் இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா.

SHARE: