அரசியல் கதையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’

அரசியல் கதையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’

SHARE
siva manasula pushpa news

நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் இரண்டு முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் பெற்றுக் கொண்டார்.  தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே. ராஜன் உடனிருந்தனர்.

படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை இப்படம் நிச்சயம் உருவாக்கும். மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். யாரும் துணிந்து நடிக்க மறுத்தார்கள். ஆகவே, இப்படத்தில் நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது.

இப்படத்தில் நாயகன் ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராகவும், நாயகி எதிர்க்கட்சியின் உறுப்பினராகவும் வருகிறார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று கூறினார்.