Archive

Tag: kamalhaasan

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை, கமல்ஹாசன் 20 லட்சம் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதற்காக நடைபெற்ற நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசினார். “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதி நல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் அவர்கள் உலகத் தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும்…

ஆந்திர அரசுக்கும், வாழ்த்திய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் நன்றி

ஆந்திர மாநில அரசின், 2014ம் ஆண்டிற்கான என்டிஆர் தேசிய விருது கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டிற்கான விருது ரஜினிகாந்துக்கும் இன்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஆந்திர மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்துக்கும் தன்னுடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்தார். Congratulations, Superstar.Rajinikanth for the NTR National award in 2016. Thank you Andhra…

என்டிஆர் தேசிய விருது, ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஆந்திர மாநில அரசின் நந்தி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அம்மாநில அரசு திரைப்படத் துறையினருக்காக வழங்கும் விருதுகள், நந்தி விருதுகள் என அழைக்கப்படுகின்றன. அந்த விருதை வாங்குவதை தெலுங்குத் திரையுலகினர் ஒரு கௌரவமாகவே நினைக்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கான திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதே போல திரையுலகில் சாதனை படைத்த சில பிரமுகர்களுக்கும் “என்டிஆர்…

பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – புகைப்படங்கள்

தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் அவருடைய ‘மய்யம் விசில்’ மொபைல் செயலி பற்றி அறிமுகப்படுத்திய நிகழ்வு.

தமிழ்க் கொலையை நிறுத்துவாரா கமல்ஹாசன் ?

தமிழ்நாட்டில் விரைவில் அரசியலில் இறங்கும் நடிகர் என கமல்ஹாசன் அடையாளம் காட்டப்பட்டு வருகிறார். அதற்கேற்றபடி அவருடைய செயல்களும் இருந்து வருகின்றன. கடந்த பல மாதங்களாகவே டிவிட்டரில் மட்டுமே அவருடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் களத்தில் இறங்கி எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தமிழ்நாட்டைக் காப்பாற்ற…

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனிக் கட்சி அறிவிப்பு ?

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்து வந்தவர்களுக்கு கமல்ஹாசனின் அரசியல் ஆர்வம் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். நிகழ்ச்சியின் தொகுப்புரையிலும், போட்டியாளர்களுடன் உரையாடும் போதும் அரசியல் கலந்த கருத்துக்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் தெரிவித்திருப்பார். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அவரைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்ற காரணத்தால்தான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை…

அரசியல் ‘என்ட்ரி’, ரஜினிகாந்த், கமல்ஹாசன், யாருக்கு ஆதரவு அதிகம் !

சென்னையில் உள்ள புகழ் பெற்ற லயோலா கல்லூரி தற்போதைய ஆட்சி குறித்து ஒரு கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக அணிகள் இரண்டாக உடைந்து, மீண்டும் ஒன்று சேர்ந்து, திரும்பவும் இரண்டாக உடைந்துள்ள நிலையில் இந்தக் கருத்துக் கணிப்புகள் மக்களின் எண்ணத்தை பிரபதிபலிப்பதாக உள்ளதா இல்லையா என்பதை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்….

‘நீட்’ பற்றி தயவாய் நீட்டி முழக்காதீர் – கமல்ஹாசன்

‘நீட்’ தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போராடிய ஏழை மாணவி அனிதா, டாக்டருக்குப் படிக்க முடியாத சோகத்தில் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்திய அவரது இழப்பு, கடந்த சில நாட்களாக மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட வைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு…

அனிதா மறைவு – ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்

‘நீட்’ தேர்வு அமல்படுத்தப்பட்டதால் + 2 தேர்வில் 1176 மதிப் பெண்கள் பெற்றிருந்தும் டாக்டருக்குப் படிக்க முடியாததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய எதிர்பாராத மறைவு தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் அவர்களுடைய இரங்கலையும், நீட் தேர்விற்கு எதிரான கருத்துக்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து…

விஜய் டிவி டிவீட்டுகளை ஓரம் கட்டிய ஓவியாவின் டிவீட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்று ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களாக இருந்து நேயர்களால் குறைந்த வாக்குகளைப் பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட ஜுலி, ஆர்த்தி ஆகியோர் இன்று மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். வாக்களித்த நேயர்களின் கருத்துக்களுக்குத் துளியும் இடம் கொடுக்காமல் பிக்…