screen4screen
Archive

Category: Reviews

கலகலப்பு 2 விமர்சனம்

சுந்தர் .சி இயக்கும் காமெடிப் படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அவருடைய முதல் படமான ‘முறை மாமன்’ படத்திலிருந்து இன்று வரை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவரும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப படங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறார். ‘சங்கமித்ரா’ படத்தை எடுக்க கொஞ்சம் தாமதம் ஆனதால், அந்த இடைவெளியில் இந்த ‘கலகலப்பு…

சவரக்கத்தி விமர்சனம்

‘கத்தி’யை கையில் எடுத்த நாயகர்கள், வில்லன்கள் ஆகியோரை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அந்தப் படங்களில் சொல்லாமல் விட்ட ஒரு உன்னதமான கருத்தை இந்த ‘சவரக்கத்தி’ படத்தில் சொல்லி நம்மை உருகவும் வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.ஆர். ஆதித்யா. படத்தின் நாயகனான ராம் கையில் நம் உடலைத் திருத்தும் சவரக்கத்தி, வில்லனான மிஷ்கின்…

விசிறி விமர்சனம்

சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்குள் நடக்கும் சண்டைகள்தான் சமூக வலைத்தளங்களில் தற்போதைய பெரும் பிரச்சினை. அதிலும், விஜய், அஜித் ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இருவரது ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டு, திட்டிக் கொண்டு சமயங்களில் வரம்பு மீறியும் நடந்து கொள்வார்கள். அந்த சண்டை விவகாரத்தை அப்படியே ஒரு கதையாக உருவாக்கி, அதற்குள் காதல், மோதல், ஒரு…

ஏமாலி – விமர்சனம்

தமிழ்ப் படங்களில் உண்மையிலேயே  ஒரு வித்தியாசமான முயற்சி இந்த ‘ஏமாலி’. இப்படி ஒரு திரைக்கதை ஆக்கத்தில் இதுவரை எந்தப் படமும் வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம். இயக்குனர் வி.இசட்.துரை திரைக்கதையில், கதையில் கொடுத்துள்ள வித்தியாசத்திற்குப் பாராட்டினாலும், படத்தில் உள்ள அதிகப்படியான ஆபாசத்திற்கும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும், புகை பிடிக்கும் காட்சிகளுக்கும் நிச்சயம் கண்டனம் தெரிவித்தே ஆக…

மதுர வீரன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், விளையாட்டு, மற்ற பழக்க வழக்கங்கள் என தமிழர்களின் பெருமையைச் சொல்லும் படங்கள் அடிக்கடி வருவதில்லை என்ற குறையை இந்தப் படம் தீர்த்து வைத்துள்ளது. 2017ம் ஆண்டு அகில உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் வீரத்தைப் போற்றும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மையப்படுத்தி, இந்தப் படத்தில் கதையை உருவாக்கி…

படை வீரன் விமர்சனம்

சாதி வெறி இன்னமும் சில கிராமத்துப் பக்கங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த காலங்களை விட சாதி மாறி காதலிப்பவர்கள் மீதான தாக்குதல் கொலை வெறி வரை சென்று கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கொடுமையை மையமாக வைத்து ஒரு உணர்வு பூர்வமான படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தனா. கிராமத்தில் வெட்டித்தனமாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும்…

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்

காதல், காமெடி, பேன்டஸி, கலந்து கலகலப்பான ஒரு படத்தைத் தனது முதல் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். ஆந்திர மலைப் பிரதேசக் கிராமத்தில் ஆரம்பமாகும் கதை, சென்னைக்கு வந்து மீண்டும் மலைக் கிராமத்திற்கே திரும்பி சென்று கலகலப்பாக முடிகிறது. எமசிங்கபுரம் என்ற ஆந்திர மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேசத்தில் வெளி உலகிற்கே தெரியாத ஒரு கிராமத்துத்…

மன்னர் வகையறா விமர்சனம்

குடும்பக் கதைகள், கிராமத்துக் கதைகள் என்றாலே தமிழ் சினிமாவில் அதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்தப் படத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மோதல், இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான காதல் இரண்டையும் மையமாக வைத்து கலகலப்பாகவும், சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார்கள். அண்ணன் கார்த்திக்குமார் காதலித்த சாந்தினிக்கு திருமணம் நடக்கப் போகும் தினத்தில் மண்டபம் புகுந்து அவரைத்…

பாகமதி விமர்சனம்

‘பாகுபலி’ என்ற உச்சரிப்பு வருவது போலவே ‘பாகமதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், பெயரில் மட்டும் அப்படி சாயல் இருக்கலாம். உருவாக்கத்தில் ‘பாகுபலி’ படத்தின் கிட்ட கூட நெருங்க முடியாத ஒரு படம்தான் இந்த ‘பாகமதி’. மக்களிடம் தனி செல்வாக்குடன் இருக்கும் மத்திய அமைச்சர் ஜெயராம். அவரை ஊழல் குற்றம் மூலம் அரசியலை விட்டே ஓட…

நிமிர் விமர்சனம்

மலையாளத்தில் நல்ல வரவேற்பையும், வசூலையும், தேசிய விருதையும் பெற்ற ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘நிமிர்’. வேற்று மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்யும் போது தமிழ் வாசம் வீசும்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களையும் கவர முடியும். அனுபவ இயக்குனரான பிரியதர்ஷன் ரீமேக் செய்துள்ள இந்தப் படத்தில் மலையாள வாசம்தான் அதிகம் வீசுகிறது. போட்டோ…