கமல்ஹாசனின் வெற்றிப் படங்களின் வரிசையில் ‘உத்தம வில்லன்’

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், ஜிப்ரான் இசையைமப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.

‘உத்தம வில்லன்’ படம் கமல்ஹாசனின் பரீட்சார்த்த முயற்சிப் படமோ என திரையுலகிலேயே சிலர் சந்தேகம் எழுப்பியிருந்தனர். படத்தின் டிரைலரை மட்டும் பார்த்தவர்கள் இது அப்படிப்பட்ட படமாக இருக்கும் என தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சில முக்கியமானவர்களுக்கு ‘உத்தம வில்லன்’ படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் கமல்ஹாசனின் நடிப்பையும், நடனத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

இந்த வயதிலும் இளமைத் துடிப்பான இளைஞரைப் போல அவர் படத்தில் தெரிகிறாராம். அது மட்டுமல்ல கமல்ஹாசனின் வசூல் ரீதியான வெற்றிப் படங்களான “பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், தசாவதாரம்’’ படங்களைப் போல இந்தப் படமும் அனைத்து விதமான ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் என்று படம் பார்த்தவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘உத்தம வில்லன்’ வெற்றி இதன் மூலம் உறுதியாகி விட்டது.