screen4screen
veera devan

வீரத் தேவன் – விரைவில்…திரையில்…

SHARE:

” வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் ” என்ற பொன்மொழியை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்தான் ” வீரத்தேவன் “.

இந்தப் படத்தில் கௌசிக் புதுமுக நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் காராத்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது.

நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்டக் கதைக்களம், அதற்கேற்ற தமிழ், அந்த வட்டார பழக்க வழக்கங்களை அறிந்தவர் என்பதால், அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

G.S. மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக, கராத்தே கோபாலன் மிக பிரமாண்டமாய் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வீரன்செல்வராசு.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது,

நாகரிகம் என்ற நச்சு இன்று, நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும் தாக்கிக்  கொண்டிருகிறது. இந்தக் கால கட்டத்திலும், உயிர்ப்புடன் இருப்பதுவும், குடும்ப உறவுகளை தாங்கி நிற்பதுவும் கிராமப்புறங்கள் தான்.

கிராமப்புற மக்களின் உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள், ஆசை, அன்பு, கோபம் போன்றவையை காதல், சென்டிமென்ட், ஆக்க்ஷன் கலந்து உருவாக்கி உள்ளோம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை படத்தின் தலைப்புக்கேற்ப ஆக்க்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.

படத்தின் படப்பிடிப்பு மதுரை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெறவுள்ளது .

ஒளிப்பதிவு – மகேஷ்.K.தேவ் / இசை – S.தர்மபிரகாஷ்

பாடல்கள் – யுகபாரதி, சினேகன், வீரன்செல்வராசு / எடிட்டிங் – A.K.நாகராஜ்

கலை – சுப்பு அழகப்பன் / நடனம் – அசோக் ராஜா, பாரதி அகர்வால்

ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ் / நிர்வாக தயாரிப்பு – M.G.சிவகுமார்

SHARE: