screen4screen
vijay-63-news

விஜய் 63 யார் இயக்குனர் ? யார் தயாரிப்பாளர் ?

‘மெர்சல்’ படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 62வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது.

இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத விஜய்யின் இந்த 62வது படத்தை அடுத்து அவர் நடிக்க உள்ள 63வது படம் என்னவாக இருக்கம் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, விஜய்யைச் சந்தித்ததால் அவர் விஜய்யின் 63வது படத்தை இயக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால், அதற்கு முன்பே ‘மெர்சல்’ படத்தின் வெற்றியால் மகிழ்ந்த விஜய், 63வது படத்தையும் ‘மெர்சல்’ படத்தை இயக்கிய அட்லீ-க்கே திரும்பவும் வாய்ப்பு கொடுப்பார் என்றார்கள்.

மோகன்ராஜாவிற்குப் பிறகு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் வினோத்-தும் விஜய்யை சந்தித்ததாகத் தகவல் வெளியானது. அதனால், அவரும் 63வது படத்தை இயக்கலாம் என்றும் சொன்னார்கள்.

இப்போதைக்கு அட்லீ, மோகன்ராஜா, வினோத் ஆகிய மூவருக்கு இடையே தான் விஜய்யின் 63வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என போட்டி உள்ளது. திடீரென வேறு யாராவது இந்தப் போட்டியில் குதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்படித்தான் ‘பைரவா’ படத்திற்கு முன் பல இயக்குனர்கள் போட்டியில் இருந்தார்கள். கடைசியில் விஜய் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன்-ஐ அழைத்து ‘பைரவா’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

அது போலவே விஜய் 63 படத்திற்கும் நடந்தாலும் நடக்கலாம். விஜய் 63 படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்றும் சில கம்பெனிகளின் பெயர்கள் அடிபடுகிறது.

விஜய்யை வைத்து ‘பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா’ ஆகிய படங்களைத் தயாரித்த சூப்பர் குட் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும், ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

விஜய் 62 ஆரம்பித்து ஷுட்டிங் ஆரம்பித்த சில நாட்களுக்குள் விஜய் 63 பற்றியும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

SHARE: