You are here: Home » TV » விஜய் டிவியில் ‘மகான்களும் அதிசயங்களும்’

விஜய் டிவியில் ‘மகான்களும் அதிசயங்களும்’

Posted On : February 10, 2014

mahangalum adhisayangalum vijay tv

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பிறப்புக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அத்தகைய புனிதமான மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, நேயர்களுக்கு அழகான கதை வடிவில் எடுத்துக்காட்ட, விஜய் டிவியில் ‘மகான்களும் அதிசயங்களும்’ என்ற புதிய தொடர் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

கடவுளின் தூதனாக, நல்ல விஷயங்களையும், நன்மைகளையும் புகட்டி வந்த புனிதர்களான மகான்களின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் இந்த மகத்தான முயற்சியை விஜய் டிவி எடுத்துள்ளது.

மகான் சத்குரு காஞ்சி பெரியவரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் இத் தொடரில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் இடம் பெறுகின்றன.

இளம் வயதிலேயே கூர்ந்த அறிவும், ஞானமும் பெற்றிருந்த இவரது வாழ்க்கை வரலாற்றை, சிறந்த தொழில்நுட்பத்துடனும், தத்ரூபமாகவும் வழங்ககிறது விஜய் டிவி.

இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

Comments are closed.

Descargar musica